இந்தியாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் வெறுப்பு குறித்து பேசி உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்கு ராகுல்காந்தி களங்கம் ஏற்படுத்துகிறார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம்சாடியுள்ளார்.
மத்தியபிரதேசம் மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் நடைபெற்ற நலதிட்டங்கள் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச மனைகள் வழங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவின் கௌரவம் மற்றும் பெருமையுடன் விளையாட வேண்டாம். மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கி மீண்டும் ஆட்சியை பிடிக்க ராகுல் காந்தி விரும்புகிறார் என குற்றம்சாட்டினார். வெறுப்பை உருவாக்குவதன் மூலம் அதிகாரத்தை அடைய முடியாது. பொதுமக்களின் நம்பிக்கையையும், அன்பையும் பெறுவதன் மூலம் மட்டுமே அதை அடைய முடியும் என்று கூறினார்.
உலக மக்கள் அனைவரையும் தன் குடும்பமாக கருதும் ஒரே நாடு இந்தியா. இந்தியாவில் வெறுப்பு மட்டுமே உள்ளது என்று இந்தியா மீது அவதூறு பரப்பப்படுகிறது. வெறுப்பை பற்றி பேசி உலக அரங்கில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள் ராகுல்காந்திக்கு அமைச்சர் ராஜ்நாத்சிங் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் கௌரம் மற்றும் பெருமையுடன் விளையாடாதீர்கள். இந்தியா முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.