புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நாம் எடுத்து கொள்வதில் தவறில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நாம் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை பாதிக்கப்படாமல் ஆய்வு செய்து புதிய கல்விக் கொள்கையில் சிலவற்றை எடுத்துக் கொள்ளலாம். தாய்மொழி கொள்கையில் படிக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் வலியுறுத்தி பேசியுள்ளதை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும். என்றும் கூறினார்.முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டிலும் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி இந்த புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், உலக அளவில் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை சிறப்பானதாக மாறும் சூழ்நிலை உருவாகும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.