முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை சோதனை ஏன்?

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் நடந்து வரும் வருமானவரித்துறை சோதனைக்கான காரணம் என்ன? என்பது குறித்த  தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2020-ல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற புகாரில் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தச் சூழலில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், ஐந்தாவது நாளாக இன்றும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், forensic audit எனப்படும் தொழில்நுட்ப தடயவியல் ஆய்வை வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து வருமான வரித் துறை ஆணையர் சுனில் குப்தா சென்னை வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளார். ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் இளமாறன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை கொண்டு அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதோடு, ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் தற்போது, 4.5 கோடி ரூபாய் பணம் மற்றும் 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் நடந்து வரும் வருமானவரித்துறை சோதனைக்கான காரணம் என்ன? என்பது குறித்த  தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஜெகத்ரட்சகன் நடத்தி வரும் அறக்கட்டளையை மையமாக வைத்தே இந்த வருமானவரித் துறை சோதனை நடப்பதாக தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது அறக்கட்டளைக்கு வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய பெயர்களில் அறக்கட்டளையை பதிவு செய்து வந்ததால் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை அறக்கட்டளை பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

இதே போன்று சவிதா கல்வி குழுமம் தொடர்பான இடங்களிலும் தனித்தனியாக இரண்டு குழுமங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சவிதா குழுமத்திற்கும், ஜெகத்ரட்சகன் சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனைகளுக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளது. அதோடு, சவிதா கல்வி குழுமம் தொடர்பான சோதனையில் 27 கோடி ரூபாய் பணம் மற்றும் 18 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் கதை

Arivazhagan Chinnasamy

‘தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது’

Arivazhagan Chinnasamy

மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் கிடந்த நாயின் சடலம்..!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading