நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பளுதூக்கும் போட்டியில் 59 கிலோ எடை பிரிவில் காஞ்சிபுரம் தனியார் கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (18). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2 ம் ஆண்டு படித்து வருகிறார்.
பளு தூக்கும் போட்டியில் தேசிய, மாநில, மாவட்ட அளவில் இதுவரை 15 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பளுதூக்கும் போட்டியில் 59 கிலோ எடை பிரிவில் யூத் ஜூனியர் பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
இதைத்தொடர்ந்து அவர் பயிற்சி பெற்று வரும் ஜிம்மில் பயிற்சியாளர்கள் சுரேஷ்குமார், மணிமாறன் மற்றும் அவரது தந்தை திருநாவுக்கரசு, சக பயிற்சியாளர்கள் தங்கப் பதக்கம் வென்ற கீர்த்தனாவுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கீர்த்தனா செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது :
என்னை போன்ற பெண்களும் சமுதாயத்தில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் . இதுவரை தேசிய, பல்கலைக்கழக மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்கள், மாவட்ட அளவில் என 15 பதக்கங்கள் வென்றுள்ளேன் என தெரிவித்தார்.







