அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை வருகிற 14ம் தேதி திறக்கப்பட உள்ளது.
அமெரிக்காவின் அக்கோகீக் பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் அம்பேத்கர் சர்வதேச மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சமத்துவத்திற்கான சிலை என்ற பெயரில், 19 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த சிற்பி, இந்த அம்பேத்கர் சிலையையும் வடிவமைத்துள்ளார். அம்பேத்கர் சிலை திறப்பு விழா வருகிற 14ம் தேதி நடைபெற உள்ளது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.







