கடந்த ஆண்டு முழுவதும் தங்கம் விலையானாது அசுரவேகத்தில் உயர்ந்து வந்தது. அதிலும் கடந்த மாதம் 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. தொடர்ந்து 27 ஆம் தேதி ஒரு சவரன் விலையானது ரூ 1,04,800 என்கிற புதிய உச்சத்தை எட்டியது.
இதனிடையே கடந்த 29-ந்தேதியில் இருந்து விலை குறைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 3-வது நாளாக நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 480-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது.
இந்த நிலையில் புத்தாண்டு (ஜன. 1, 2026) நாளான இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,440-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.92,520-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.256-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







