முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலை மையில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், 20 மாதங்களுக்கு பிறகு மாநில நிதியமைச்சர்கள் நேரடியாக கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிச்சலுகையை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர தற்போது வாய்ப்பில்லை எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

வலிமையில் விக்னேஷ் சிவன்?

Saravana Kumar

’மின்சார வாரியம் தனியார்மயமாகாது’- அமைச்சர் தங்கமணி!

Jayapriya

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

Gayathri Venkatesan