பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி வழங்கப்பட்ட அர சாணை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார்.
அரசுப் பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி கடந்த 24ம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணை குறித்து விளக்கம் அளித்து அனைத்து அரசு துறைகளுக்கும், தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அரசாணை வெளியாவதற்கு முன்பே 9 மாத பேறுகால விடுப்பில் சென்றவர்களும், 12 மாத பேறுகால விடுப்புக்கு தகுதி உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாத கால விடுப்பு முடிந்தும், பணிக்கு திரும்பாமல் விடுப்பில் உள்ளவர்களுக்கும், அது பணி நாளாகவே கருதப்படும் என்றும், முன்னர் விடுப்பில் சென்று, பணிக்கு திரும்பாத அனைவருக்கும் 12 மாத கால பேறுகால விடுப்பு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள் ளது.







