பிரபல இயற்பியல் பேராசிரியரும் விஞ்ஞானியுமான தாணு பத்மநாபன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 64.
புனேவில் உள்ள இன்டா்சிட்டி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணி யாற்றி வந்தவர் தாணு பத்மநாபன். புவியீா்ப்பு விசை, குவாண்டம் இயற்பியல், அண்டத்தின் அமைப்பு ஆகியவை தொடா்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் இவர்.
ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டு சா்வதேச அறிவியல் ஆய்விதழ்களில் 300-க்கும் மேற் பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி இருக்கும் இவர், அறிவியல் நூல்களையும் எழுதியிருக் கிறார். இவருக்கு மத்திய அரசு கடந்த 2007-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது. சமீபத் தில் அவருக்கு கேரள அறிவியல், தொழில்நுட்ப கவுன்சில் ‘கேரள சாஸ்திர புரஸ் காரம்’ என் னும் வாழ்நாள் சாதனை விருதை வழங்கியது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராக பணியாற்றி வந்த இவர், புனேவில் வசித்து வந்தார். நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். அவர் மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், விஞ்ஞானிகள் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தாணு பத்மநாபனின் மனைவி, மகளும் இயற்பியல் விஞ்ஞானிகளாக உள்ளனர்.








