தொண்டர்கள் தான் ’SECRET OF MY ENERGY’ – திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

தொண்டர்கள் தான் ’SECRET OF MY ENERGY’  என திருவண்ணாமலை திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டத்தில்…

தொண்டர்கள் தான் ’SECRET OF MY ENERGY’  என திருவண்ணாமலை திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டத்தில் திருவண்ணாமலையில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு க ஸ்டாலின் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் தெரிவித்ததாவது..

 “தேர்தலுக்கு முன்பாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் தான் தொடங்கப்பட்டது.  வாக்குச்சாவடி பொறுப்பாளர்களே
நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீங்கள் தான் பொறுப்பாளர்கள் வாக்காளர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என பார்ப்பது உங்களின் முதல் பணி.

வாக்கு பதிவு நாட்களில் வாக்காளர்களை வாக்கு சாவடிகளுகளுக்கு அழைத்து வரவேண்டியதும் உங்களது முக்கியமான பணி.  அதேபோல முதியோர் உதவி தொகை பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளை பொதுமக்களிடம் கேட்டு அவர்களுக்கு செய்து தர வேண்டும்.

உங்கள் மூலம் கொண்டு வரப்படும் கோரிக்கைகளை கட்டாயம் நிறைவேற்றப்படும். எல்லோருக்கும் பொதுவான மக்களாட்சி நடத்தி வருகிறோம். ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகை வழங்கப்படுகிறது . கடந்த இரண்டு மாதமாக பெண்கள் ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கு அலைமோதுவதை பார்க்கிறோம் இந்த திட்டம் பெண்களை கவர்ந்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை என பழனிச்சாமி  விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.  காலை சிற்றுண்டி திட்டம் யார் போட்ட திட்டம்..? இவையெல்லாம் பச்ச பொய் என்பது பழனிச்சாமிக்கு தெரியுமா..?

சாத்தான்குளம் ஜெயராஜ் மரணம் இன்னும் ஆறாத வடுவாக உள்ளது.  திமுக குடும்ப கட்சி தான் கோடிக்கணக்கான தமிழ் குடும்பங்களை வாழ வைப்பது திமுக குடும்ப கட்சி தான். தொண்டர்கள் தான் ‘SECRET OF MY ENERGY’; தொண்டர்களை நம்பித்தான் ‘நாற்பதும் நமதே, நாடும் நமதே’ என முழங்கிக் கொண்டிருக்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.