NIA பெயரில் பரவும் போலி தகவல் – உஷாராக இருக்க வேண்டும் என NIA எச்சரிக்கை..!

தேசிய புலனாய்வு முகமையின் பெயரால் மொபைல் எண்களுடன் அடங்கிய போலி தகவல்களை மறுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என NIA மறுத்துள்ளது. தேச விரோத நடவடிக்கையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு தேசிய…

தேசிய புலனாய்வு முகமையின் பெயரால் மொபைல் எண்களுடன் அடங்கிய போலி தகவல்களை மறுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என NIA மறுத்துள்ளது.

தேச விரோத நடவடிக்கையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டால் உடனடியாக தகவல்
தெரிவிக்குமாறு தேசிய புலனாய்வு முகமே அமைப்பு சார்பில் தொலைபேசி எண்கள்,
செல்போன் எண்கள்,  இமெயில் முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக போலியான தகவல்கள் அடங்கிய பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் NIA பெயரில் வெளியாகும் தகவல் பொய்யானது என தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தெரிவித்துள்ளது. இது போன்ற பொய்யான அறிவிப்புகளை தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிடவில்லை எனவும் NIA  தெரிவித்துள்ளது.

மேலும் NIA India என்ற  எக்ஸ் பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வழியாகும் என பொதுமக்களுக்கு NIA தெரிவித்துள்ளது.  மேலும் இதுகுறித்து NIA நடத்திய விசாரணையில் ஐஎஸ் தீவிரவாதிகள் இது போன்று தவறான கருத்துக்களை பரப்பி இளைஞர்களை குறி வைத்து வன்முறையிலும் சட்டவிரோத செயல்கள் ஈடுபடுத்த திட்டமிடுவதாக கண்டுபிடித்துள்ளதாக NIA தெரிவித்துள்ளது.

கடந்தாண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் இதே போன்று பொய்யான அறிவிப்புகள்
வெளியாகி இருந்ததாகவும் NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.