நாகர்கோவிலில் விஜயதசமி நாள் விசேஷம் – கல்வி துவங்கிய குழந்தைகள்..!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆலயங்களில் குழந்தைகளுக்கு முதல் முதலாக கல்வி புகட்டும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. விஜயதசமியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆலயங்களில் குழந்தைகளுக்கு…

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆலயங்களில் குழந்தைகளுக்கு முதல் முதலாக கல்வி புகட்டும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

விஜயதசமியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆலயங்களில் குழந்தைகளுக்கு முதல் முதலாக கல்வி புகட்டும் வித்தியாரம்பம் எனப்படும் ஏடு துவக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தங்க ஊசியாலும், பச்சரிசியிலும் அகர முதல எழுத்துகளை எழுத செய்து குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைக்கப்பட்டது.

நவராத்திரி விழாவின் பத்தாவது நாள் விஜயதசமி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி சரஸ்வதி மற்றும் துர்கா கோயில்களில் குழந்தைகளுக்கான கல்வி தொடங்கும் வகையில் ஏடு தொடங்கும் வித்யாம்பரம் நிகழ்சியாக ஒவ்வொரு ஆண்டும் மங்களகரமாக கொண்டபட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: முன்னாள் சூழல்பந்து வீச்சாளர் பிஷன் சிங் மறைவு; இந்திய கிரிக்கெட் வாரியம் இரங்கல்

அந்த வகையில் இன்று விஜயதசமி விழா கன்னியாகுமரி நாகர்கோவிலில் பார்வதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வனமாலீஸ்வரர் கோயிலில் உள்ள சரஸ்வதி சன்னிதானத்தில் கோயில் குருக்கள் குழந்தைகளின் நாவில் தங்க ஊசியால் எழுதியும், குழந்தைகளின் கை விரல்களை கொண்டு பச்சரிசியிலும் அகர முதல எழுத்துகளை எழுத செய்து குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர்.

விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு ஏடு தொடங்கினால் அவர்களின் வாழ்வில் கல்வி செல்வம் பெருகும் என்ற ஐதீகத்தான் அடிப்படையில் வந்து உள்ளோம் என பெற்றோர்கள் மகிழ்சியாக தெரிவித்தனர். இதில் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளுடன் வருகை தந்தனர்.

அ.சௌமியா அப்பர்சுந்தரம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.