உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதையுடன் இருதிச் சடங்கு..!

‘உடல் உறுப்பு தானம்’ என்பது தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புகளின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். உடல் உறப்புகளின்…

‘உடல் உறுப்பு தானம்’ என்பது தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புகளின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். உடல் உறப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.

உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உறுப்புகள்;-

ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி ஆகும்.

இறந்த பின்னர் தரக்கூடிய உறுப்புகள்;

இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).

வயது வரம்பு;-

18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள் ஆண்,பெண் என அனைவரும் தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.

உறுப்பு தானம் செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவத்தைக் கேட்டு, அதை நிரப்பி உங்களிடமே வைத்துகொள்ளவேண்டும். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அல்லது http://www.mtvorgandaan.com யில் உறுப்பு தான உறுதிமொழி படிவத்தை நிரப்பவும். அல்லது கட்டணமில்லா எண் ;- 18001203648ஐ அழைக்கலாம். அல்லது 104 என்கிற மருத்துவ உதவி எண்னை அழைத்து விவரங்களை பெறலாம்.

உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரின் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

செப்.23ம் தேதி உடல் உறுப்புதான தினமாகக் கடைப்பிடிக்கிறது. உறுப்பு தானம் வழங்குவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

இறந்தபின் மனித உடல் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாக போக வேண்டுமா? 

பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நம் உடல் உறுப்புகள் இந்த உலகில் பலரின் உடம்பில் வாழலாம். ஆகவே, நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் நாம் இம்மண்ணில் என்றென்றும் வாழலாம்.

– ஜெ. சுபதர்ஷினி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.