முன்னாள் சூழல்பந்து வீச்சாளர் பிஷன் சிங் மறைவு; இந்திய கிரிக்கெட் வாரியம் இரங்கல்…

முன்னாள் சூழல்பந்து வீச்சாளர் பிஷன் சிங் மறைவுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்திய அணிக்காக 1967 முதல் 1979 வரையிலான காலக்கட்டத்தில் 67 டெஸ்ட் போட்டிகளில் பிஷன் சிங் பேடி விளையாடியுள்ளார்.…

முன்னாள் சூழல்பந்து வீச்சாளர் பிஷன் சிங் மறைவுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இந்திய அணிக்காக 1967 முதல் 1979 வரையிலான காலக்கட்டத்தில் 67 டெஸ்ட் போட்டிகளில் பிஷன் சிங் பேடி விளையாடியுள்ளார். இந்திய சுழற் பந்துவீச்சின் அடித்தளத்தை கட்டமைத்த அவர், டெஸ்ட் போட்டிகளில் 266 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும், 22 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் 77 வயதான பிஷன் சிங் பேடி, திடீரென காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.