அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது:விஜய் வசந்த்

தமிழகத்தில் நடைபெறும் அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளன,எனவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்…

தமிழகத்தில் நடைபெறும் அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளன,எனவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து வாக்குகளை சேகரித்து வருகிறார். இந்த நிலையில் விளவங்கோடு சட்ட மன்ற தொகுதியில் வாக்கு சேகரிக்கும் போது பேசிய அவர்,
தமிழகத்தில் நடைபெறும் அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளன எனவும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்தால் தலைவர் ஸ்டாலின் முதல்வராவதை தொடர்ந்து தமிழகத்தில் குமரிக்கு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர முடியும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.