முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை! ” ராதாகிருஷ்ணன்

கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லையென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,

“கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை. ஆனாலும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்வதால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தற்போது 1,124 கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். மொத்த படுக்கைகள் 4,368 ஆக உள்ளது.” என்று கூறியுள்ளார்.

மேலும், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஒரே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வத்தைத் தவிர்த்து, கொரோனா பாதிப்பின் அளவை பொறுத்து அதற்கேற்றவாறு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.” என்றும் கூறியுள்ளார். மேலும்,

“அரசியல் கட்சியினர் தேர்தலுக்காக கூட்டத்தை கூட்டும் போது அங்கு வரும் நபர்கள் முகக் கவசம் அணிவதை உறுதி செய்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் பரிசோதனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளார்.

இதன் பின்னர் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா சிகிச்சைப் பிரிவுகள் போதிய படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர் வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. பள்ளி, கல்லூரிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்குப் பின் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில்தான், கட்டுப்பாடுகள் அதிகரிக்கும். தேர்தலுக்குப் பின் பொதுவாகவே கட்டுப்பாடுகள் அதிகரிக்கும். ஊரடங்கு வரும் என்பவை வெறும் வதந்திகள் தான். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம்.” என்றும் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பத்மசேஷாத்ரி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான வழக்கை முன்கூட்டியே விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Ezhilarasan

அமேசானில் மாட்டு சாணம் ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர்: சுவை குறித்து சொன்ன சுவாரஸ்ய ரிவியூவ்!

Saravana

குளிர்காலத்தில் மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி?

Saravana Kumar