ஒரு கிலோ தக்காளி 5 ரூபாயா?

சேலத்தில் வியாபாரி ஒருவர், 5 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்வதை அறிந்த பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கிச்சென்றனர். தொடர் மழையின் காரணமாகத் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் ஒரு கிலோ தக்காளியின் விலை புதிய…

சேலத்தில் வியாபாரி ஒருவர், 5 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்வதை அறிந்த பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கிச்சென்றனர்.

தொடர் மழையின் காரணமாகத் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் ஒரு கிலோ தக்காளியின் விலை புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், தக்காளியின் விலை சற்று குறையத் தொடங்கியது. தற்போது சந்தைகளில் தக்காளியின் விலை, ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலையில், சேலம் கோட்டை திருமணிமுத்தாறு ஆற்றோரம் உள்ள காய்கறி கடையில் வியாபாரி ஒருவர் ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அறிவித்து இருந்தார்.

காய்கறி வியாபாரியான அருள், தனது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 5 ரூபாய்க்கு விற்பனை செய்வதை அறிந்த பொதுமக்கள், தக்காளியை வாங்கிச்செல்ல அதிகளவில் குவிந்தனர். இதனையடுத்து ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்து, வரிசையில் நின்ற பெண்களுக்குத் தக்காளியை விற்பனை செய்தார். இதுநாள் வரை தக்காளி விற்பனையின் மூலம் லாபம் ஈட்டிய நிலையில், தனது பிறந்த நாளில் மக்களுக்கு உதவிடும் வகையில் தக்காளியை விற்பனை செய்ததாக வியாபாரி அருள் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.