“ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும்; இது எனது அரசு அல்ல நமது அரசு.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர், “பல ஆயிரம் சிந்தனைகளை கொண்டவர் பாரதி; பாரதியின் கவிதை, பாடல்களை மக்களின் மனதிலிருந்து நீக்க முடியாது, பாரதியின் பாதை புதிய சமூகம் அமைக்கும் பாதை” என்று கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், “ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும்; இது எனது அரசு அல்ல நமது அரசு, பாரதியார் இன்றும் தேவைப்படுகிறார், பாரதி காலத்தின் தேவை” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், மத்திய பண்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அவர், “ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற கவியை பாடி அனைவரும் சமம் என்று சொன்ன பாரதியார் மிக அருமையான புலவர்” என்று பாரதியார் பெருமை குறித்து குறிப்பிட்டார்.