முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நிழலாக கருதப்பட்ட சண்முகநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த சண்முகநாதன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் 48 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர். 80 வயதான அவர், உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
மருத்துவமனையிலிருந்து தேனாம்பேட்டைShanmuganathanயில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் கொண்டுசெல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது முதலமைச்சரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இறுதி ஊர்வலம் நடைபெறும் வரை அவரது இல்லத்திலேயே இருந்தார். பிற்பகலில் சண்முகநாதனின் உடல் ஊர்வலமாக மயிலாப்பூர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
3 முறை அவரது இல்லத்திற்கு சென்றுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயானத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கிலும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் சண்முகநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது.








