”மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று திருத்தணியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியது,
”கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் பரம்பரையா…? ஒரு குடும்பம் வாழ்வதற்கு எட்டு கோடி மக்களின் வரிப்பணத்தை சுருட்டி கொள்ளுகிறார்கள். மக்களை வாட்டி வதைக்கிறார்கள். விலைவாசி உயர்வு பற்றி முதலமைச்சர் கவலை படவில்லை.
டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெற்பயிர்கள் அனைத்தும் அழிகிவிட்டன. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முதலமைச்சர் சினிமா பார்த்துக் கொண்டுள்ளார். மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் விவசாயிகள் விளைவித்த கொள்முதல் செய்ய முடியவில்லை.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டது . எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை திருட்டு பாலியல் வன்கொடுமை என தமிழகத்தில் குற்ற செயல்கள் நடைபெறாத நாளே இல்லை. சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி ரயிலில் வந்த வடமாநில இளைஞரை நான்கு இளைஞர்கள் துடிதுடிக்க வெட்டும் காட்சி பதை பதைப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாமல் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. இது குறித்து பலமுறை இந்த அரசாங்கத்திற்கு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை” என்றார்.







