முக்கியச் செய்திகள்

தக்காளி விலை உயர்வு – நியூஸ் 7 தமிழின் கள ஆய்வு; நிபுணர்களின் பரிந்துரைகள்

தக்காளி விலை உயர்வு தொடர்பாக நியூஸ் 7 தமிழ் நடத்திய கள ஆய்வின்போது, நிபுணர்கள் அளித்த பரிந்துரைகள் என்னென்ன என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

வடகிழக்கு பருவமழை, வரத்து குறைவு ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இந்தநிலையில் தான் நியூஸ் 7 தமிழ் தக்காளி விலை உயர்வுக்கான காரணம் குறித்து கள ஆய்வு நடத்தியது. அதில், நிபுணர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். அதில், முக்கியமாக காய்கறியை பாதுகாக்க, பகுதிவாரியாக குளிர் பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் எனவும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், தட்டுப்பாடு காலங்களில் விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். பிற விளை பொருட்களுக்கு இருப்பது போன்று, தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து விளை பொருட்களை கொண்டு செல்வதற்கு, விவசாயிகளுக்கு இலவச போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்றும் ரேசன் கடைகளில் தக்காளி விநியோகம் தவறானது என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நிபுணர்கள் அளித்தனர்.

Advertisement:
SHARE

Related posts

வேளாண் சட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம்: ஜி.கே.வாசன்

Jeba Arul Robinson

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்

Halley karthi

கோவை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் மோதல்

Vandhana