தமிழ் நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்,
”திமுக அரசு மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெற்றுத்தர முடியாத அரசாக திமுக உள்ளது. திமுக 2021 தேர்தலில் (525) அறிவிப்புகளை வெளியிட்டனர். அந்த அறிவிப்புகளை ஒன்றைகூட நிறைவேற்றவில்லை. ஆனால் முதலமைச்சர் 95% நிறைவேற்றி உள்ளது என்று பொய் சொல்கிறார்.
முதலமைச்சர் அவர்களே 100 நாள் வேலை திட்டம் உங்களுடைய தேர்தல் அறிக்கையில் 150 நாள் உயர்த்தப்படும் என்று அறிக்கிவிட்டீர்கள் உயர்த்தினீர்களா..? தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்த வேண்டும் என்று அதிமுக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. அதிமுக ஆட்சி அமைத்தால் கண்டிப்பாக 100 நாள் வேலையானது 150 நாளாக மாற்றப்படும்
திமுக அரசாங்கம் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்ற அரசாங்கமாகும். மின் கட்டணம், தண்ணீர் வரி, வீட்டு வரி அனைத்து வரியும் உயர்ந்துவிட்டது . கொரோனா காலத்தில் மக்களுக்கு வேலை இல்லாமல் இருந்த மக்களுக்கு நிதி உதவி அளித்தோம். பள்ளி மாணவர்களுக்கு ஆள் பாஸ் போட்டுக் கொடுத்தோம்.
அதிமுக ஆட்சி வந்தால் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், லேப்டாப் வழங்கப்படும். . மீண்டும் அனைத்து இடங்களிலும் அம்மா உணவகம் திறக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான 14 உபகரண பொருட்கள் மீண்டும் வழங்கப்படும்.
திமுக ஆட்சியில் 210 அரசாங்க பள்ளி மூடப்பட்டது. 96 அரசு கலைக் கல்லூரிகள் முதல்வரே இல்லாமல் செயல்பட்டு வருகிறது. எப்படி மாணவச் செல்வங்கள் படிப்பார்கள்…? அதிமுக ஆட்சியில் 17 அரசு கல்லூரி மருத்துவமனை திறந்து வைத்தோம். பத்து ஆண்டுகளில் 7 சட்டக்கல்லூரிகளை கொண்டு வந்தோம். இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பதற்கு தமிழ்நாடு என்று கொண்டு வந்தது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் தேசிய அளவில் தமிழ்நாடு விருது பெற்றது. அனைத்து துறைகளிலும் விருதுகள் பெற்ற ஆட்சியாக அதிமுக ஆட்சி விளங்கியது.
மக்களை சந்திக்கும்போது நாங்கள் நெஞ்சை நிமிர்ந்து மக்களை சந்திக்கிறோம். இந்த முறை கண்டிப்பாக உங்களால் ஆட்சி அமைக்க முடியாது. உங்கள் ஆட்சி என்பது கொள்ளையடிப்பது மட்டும் தான். இந்தியாவிலேயே கடன் வாங்குவது முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த சாதனையை தான் தமிழக முதலமைச்சர் செய்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சி அமைத்தால் செவிலியர்களை நிரந்தர பணியாளராக மாற்றுவோம் என்று அறிவித்தனர். ஆனால் இதுவரையும் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வில்லை. அதிமுக ஆட்சி அமைத்தால் செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்.
ஸ்டாலின் அவர்களே உங்கள் ஆட்சியில் ஏழை மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. திமுக அரசானது, மத்திய அரசை குறை கூறி தமிழகத்திற்கு கிடைக்கும் அனைத்து நிதிகளையும் கிடைக்காமல் செய்துள்ளது. அதிமுக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார். இறுதியாக அவர், அனைவருக்கும் தைப்பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து பேச்சை முடித்தார்.







