முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: திருப்பூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக தடுப்பூசி போடும்பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்றும் தற்போது 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் கூடுதல் தடுப்பூசிகள் வர இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டத்தை, திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார் என்ற செய்தி இப்போது கிடைத்துள்ளது.

Advertisement:

Related posts

தமிழகத்தில் ஜன.19 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பு!

Saravana

நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

Ezhilarasan

அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனு தாக்கல்!

Gayathri Venkatesan