GOLD RATE | தங்கம் விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன……?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.

தங்கம் விலையானது நாள் தோறும் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. திங்கள் கிழமையான நேற்று தங்கம் விலையானது, கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14,440-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 265-க்கும், ஒரு கிலோ ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.