தனியார் மருத்துவமனைகளுக்கான ரெம்டெசிவர் மருந்து விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று தொடங்கி வைத்தார்.
கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்தை வாங்க, நோயாளிகளின் உறவினர்கள் நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, நியூஸ் 7 தமிழ் தொடர்ந்து பிரத்யேகமாக செய்திகளை வெளியிட்டது.
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக ரெம்டெசிவர் மருந்து தனியார் மருத்துவமனைகளுக்கே நேரடியாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, ரெம்டெசிவர் மருந்தை பெற tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தில் 250-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்தன.

அதனடிப்படையில், தனியார் மருத்துவமனைகளுக்கான ரெம்டெசிவர் மருந்து விற்பனையை, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த, 25 தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டது.







