அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா உடல் தகனம்!

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல், அரசு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுச்சேரி லாசுப்பேட்டை அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார். அவர் அவரது வயது…

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல், அரசு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுச்சேரி லாசுப்பேட்டை அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார். அவர் அவரது வயது மூப்பு காரணமாக நேற்று முன் தினம் இரவு காலமானார். அவர் உடலுக்கு புதுவை அரசு சார்பில் காவல் துறையினரின் மரியாதை அளிக்கப்பட்டது.

இதன்பின்னர் அவரது உடல், அவர் சொந்த ஊரான கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் பிற்பகல் 12.30 மணியளவில் அவர் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பின்னர் முழு அரசு மரியாதையுடன் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, சு.வெங்கடேசன், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.