முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுச்சேரியில் புது முயற்சி: ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து தடுப்பூசி!

புதுச்சேரி அரசின் புதிய முயற்சியாக ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணியை நாளை துவக்கி வைக்க உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் மாளிகையில் தொடங்கப்பட்டுள்ள உயிர்க்காற்று திட்டத்தின் கீழ் ஏராளமான தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் ஃப்லோமீட்டர்கள் மற்றும் முககவசம், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை ஆளுநர் தமிழிசை மற்றும் சுகாதாரத் துறையிடம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் நம்பிக்கையோடு வரும் அளவுக்கு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இந்த 2-வது அலையோடு கொரோனா ஒழிந்து விட வேண்டும் என்றும், அதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், அரசின் புதிய முயற்சியாக ஒவ்வொரு கிராமமாக தத்தெடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை முதல் துவக்கி வைக்க உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா நிவாரணம்: தொல். திருமாவளவன் கோரிக்கை

Karthick

முதல்வர் படம் இடம் பெறாத கொரோனா நிவாரண தொகுப்பு பை!

Vandhana

‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்?’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்!

Gayathri Venkatesan