முக்கியச் செய்திகள் தமிழகம்

6 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பா?

கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் சுகன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் கொரோனா தொற்று குறைந்தாலும், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்த வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளப்பட்டது.

Advertisement:
SHARE

Related posts

எனிமி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

Saravana Kumar

கம்யூனிஸ்ட் கட்சிகளை மிகுந்த பகுத்தறிவு கொண்ட கட்சியாக மதிக்கிறேன்: ஜெயக்குமார்

Niruban Chakkaaravarthi

கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட தடை!

Halley karthi