முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை உடனடியாகத் திரும்ப பெற முதல்வர் வலியுறுத்தல்!

லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகள், நிர்வாக அதிகாரியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த யூனியன் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரியான தினேஷ்வர் சர்மா, கடந்தாண்டு உயிரிழந்ததை அடுத்து தாத்ரா- நாகர்ஹவேலி மற்றும் டாமன் – டையு யூனியன் பிரதேச நிர்வாகியாக இருக்கும் பிரஃபுல் கோடா படேல், லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்துக்கும் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

இவருடைய நிர்வாக நடவடிக்கைகள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. லட்சத்தீவை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும் என்ற நிலையை மாற்றி அங்கு யார் வேண்டுமானாலும், நிலம் வாங்கலாம் என்றும் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கும் விதமான முன்னெடுப்புகள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை கலைத்தது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

லட்சத்தீவுகளில் பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இசுலாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. பிரதமர் தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும். பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கேஷ்பேக் சலுகை

Saravana Kumar

அரியர் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

Saravana Kumar

ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து ரூ.25 கோடி வசூல்!