புதுச்சேரியில் மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு!

புதுச்சேரியில் மேலும் இரண்டு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அமைச்சரவை பங்கீடு தொடர்ந்து…

புதுச்சேரியில் மேலும் இரண்டு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அமைச்சரவை பங்கீடு தொடர்ந்து இழுபறியில் இருப்பதால் அமைச்சர்கள் யாரும் இதுவரை பதவி ஏற்கவில்லை. இந்தச் சூழலில் பாஜகவை சேர்ந்த மூன்று நபர்களை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக மத்திய அரசு நியமித்தது. இதனால் புதுச்சேரி சட்டபேரவையில் பாஜகவின் பலம் 9 ஆக அதிகரித்தது.

மேலும் ஏற்கனவே ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது உழவர்கரை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் மற்றும் திருபுவனை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் ஆகியோர் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 12 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.