கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குழுவை அமைத்து அறிக்கை அளிக்கும்படி ஆணையிட்டு இருந்தது.
இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், தமிழக அரசின் எதிர்ப்பால்தான், காவிரி ஆணையத்தின் 3 கூட்டங்களில் மேகதாது பற்றி விவாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், மேகதாது பிரச்னை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.