முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று 1,329 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்

மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 1,329 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 26,78,265 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 16,130 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,40,091 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,84,63,913 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதேபோல இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 763 பேர் ஆண்கள் மற்றும் 566 பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,436 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 26,26,352ஆக அதிகரித்துள்ளது. அதேபோல 15 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 35,783ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 171 பேரும், கோவையில் 132 பேரும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசியை பொறுத்த அளவில், இன்று மாநிலம் முழுவதும் 5ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி நிலவரப்படி 20 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

எழுவர் விடுதலை – குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும்; அமைச்சர் ரகுபதி

Saravana Kumar

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு; முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

Saravana

“வங்கதேச விடுதலைக்கான போராட்டத்தில் சிறைக்கு சென்றேன்!” பிரதமர் மோடி!

Halley Karthik