முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல்: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்? இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் இறுதி போட்டியில் நுழைவதற்கான பலப்பரீட்சை இன்று நடக்கின்றது. இதில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

14-வது ஐபிஎல் லீக் போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி சுற்றுக்கான தகுதி போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில், முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றியடையும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதிபெறும். முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் நடப்பு சாம்பியனான மும்பை அணி வெளியேறியது. இந்நிலையில் தற்போது டோனி தலைமையிலான சென்னை அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்தது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப்புக்கு எதிராக) தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளது.

மறுபுறம் டெல்லி அணி 10 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் 20 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடைய பலப்பரீட்சை நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியில், ருதுராஜ் கெய்க்வாட், பிளிஸ்சிஸ், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, உத்தப்பா அல்லது சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், ஹேசில்வுட் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல டெல்லி அணியின் சார்பாக பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிஷாப் பண்ட் (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோனிஸ் அல்லது ரிபால் பட்டேல், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், ரபடா, அன்ரிச் நோர்டியா, அவேஷ் கான் ஆகியோர்கள் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கடந்த ஆண்டு முதல்முறையாக இறுதி ஆட்டத்திற்கு வந்து தோல்வி அடைந்த டெல்லி அணி, இந்த சீசனில் முதல்முறையாக தொடரை வென்றுவிட வேண்டுமென கவனமுடன் விளையாடி வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

சென்னையில் தங்கம் விலை குறைந்தது

Ezhilarasan

அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்றார் ஜோ பைடன்

Jeba Arul Robinson

ஆம்புலன்ஸ் இல்லாததால் நேர்ந்த கொடுமை!

Vandhana