29.4 C
Chennai
November 30, 2021
முக்கியச் செய்திகள் தமிழகம்

“கூலாக இல்லாவிட்டால் அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது” – ஆளுநர்

கூலாக இல்லாவிட்டால் தமிழக அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தனியார் மருத்துவமனை கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சிறப்புரையாற்றி அவர், கூலாக இல்லாவிட்டால் தமிழக அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும், “கொரோனாவிற்கு அடுத்தபடியாக லாக்டவுன் என்ற அடைப்பிலிருந்து வெளியே வந்து இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். எனக்கு தூத்துக்குடிக்கும் மதுரைக்கும் பெரிய இணைப்பு உள்ளது. எனது அடிப்படை கல்வி ஆரம்பித்ததே மதுரையில்தான். எனது தந்தை மதுரையில் இருந்துதான் அரசியலுக்கு சென்றார்.

மதுரைக்கு வந்தால் மீனாட்சி அம்மனை தரிசிப்பது வழக்கம், ஆனால் கோயில்கள் திறக்கப்படவில்லை என கூறினார்கள். புதுச்சேரியில் மணக்குள விநாயகரை தரிசித்துவிட்டுதான் வந்தேன். இங்கே நிர்வாக காரணங்களால் கோயில்கள் திறக்கவில்லை. அதை பரிசீலனை செய்ய வேண்டும். கோயில் வழிபாடு கலாச்சாரத்தோடு இணைந்தது.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சிலம்பம் என்றால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்தான் என் நினைவுக்கு வருவார். சிலம்பம் என்பதை மருத்துவராக நான் வரவேற்கிறேன். மனதிற்கும் உடலுக்கும் ஒருங்கிணைப்பை தருவது சிலம்பம். சிலம்பம் உடல்நலத்தை மட்டுமல்ல மனநலத்தையும் பாதுகாக்கிறது. கொரோனா பழையவற்றை மறந்துவிட வேண்டாம் என்பதைதான் சொல்லிக்கொடுத்தது. ஆயக்கலைகள் 64ல் சிலம்பமும் ஒன்றாக உள்ளது.

தமிழர்கள் சிலம்பத்திற்கான கம்பை தேர்ந்தெடுப்பதை ஒரு கலையாக வைத்துள்ளனர். கூலா இருந்தால் எல்லாவற்றையும் அடித்து தள்ளலாம் என சிலம்ப கம்பை வைத்து சொல்லலாம். கூலாக இல்லாவிட்டால் தமிழக அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது. கத்தியும் துப்பாக்பியும் ஆயுதம் ஆல்லை, வல்லவனுக்கு கம்பும் ஆயுதம்தான்.

அக்காலத்தில் மிருகங்களை விரட்ட சிலம்பம் பயன்பட்டது. இக்காலத்தில் பெண் குழந்தைகள் சிலம்பம் கற்றுக்கொள்ள வேண்டும். மனித மிருகங்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள பெண் குழந்தைகளுக்கு சிலம்பத்தை கற்றுக்கொடுங்கள், பள்ளிக்கல்வியில் சிலம்பத்தையும் தற்காப்புக்கலையையும் பாடமாக சேர்த்தால் நன்றாக இருக்கும். இது எனது கோரிக்கை. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தற்காப்புக்கலை கற்றுக்கொடுக்க வேண்டியது கட்டாயம்.” என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

Gayathri Venkatesan

டிராக்டர் பேரணி; விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு!

Jayapriya

”இந்தியர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்’- ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்!

Jayapriya