முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

“சுயமரியாதையை மீட்க திமுகவுக்கு ஆதரவு தாருங்கள்” ஸ்டாலின்!

மாநில உரிமையை காக்க சுயமரியாதையை மீட்டெடுக்க திமுகவுக்கு ஆதரவு தாருங்கள், மத வெறியை தூண்டும் பா.ஜா.கவின் எண்ணம் இங்கு பலிக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டிஆர்எஸ் சண்முகசுந்தரம், குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் இழித்துரை ராமசந்திரன், உதகை காங்கிரஸ் வேட்பாளர் கணேசன் கூடலூர் திமுக வேட்பாளர் காசிலிங்கம் உள்ளிட்ட 4 தொகுதியின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின்,“ நீலகிரிக்கு தமிழக முதல்வர் ஹெலிகாப்டரில் பிரசாரத்திற்கு வருகிறார். இதே முதல்வர் நீலகிரியில் நிலசரிவு ஏற்பட்ட போது ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டாரா? ஆனால் இப்பகுதிக்கு வந்து பார்வையிட்டேன். நிலசரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பாக ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது. திமுகவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இதனை மக்களிடம் இங்கு வந்துள்ளவர்களிடம் உரிமையோடு கேட்கிறேன்

பிரதமர் மோடி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். பொள்ளாச்சி நடைபெற்ற சம்பவம் அதை நினைத்து பார்க்க வேண்டும். 400 பெண்களுக்கு மேல் பாலியல் வன்கொடுமைகள் செய்யப்பட்டுள்ளனர். இது அதிமுக ஆட்சியில் நடந்தது. இதை பிரதமர் மோடி தெரிந்து கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. ஒரே ஒரு அதிமுக எம்பி ஒபி எஸ் மகன் மட்டும் வெற்றி பெற்றார். அவர் பிஜேபி எம்பியாக செயல்படுகிறார். எனவே இந்த தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் கூட வெற்றி பெற கூடாது. அப்படி வெற்றி பெற்றால் அவர்கள் பிஜேபி எம்.எல்.ஏ வாக செயல்படுவார்கள்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை உள்ளதா என பிரதமர் மோடி போய் பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. விலை வாசிகளை கட்டுப்படுத்த தமிழகம் வளர்ச்சிக்கு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இருந்த உருளைகிழங்கு ஆராய்ச்சி மையம் குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அது மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்படும். அதே போல் மேட்டுப்பாளையத்தில் வாழை ஆராய்ச்சி மையம், அரசு ம்ருத்துவமனை நவீன படுத்தப்படும்.மாநில உரிமைகளை காக்க, சுயமரியாதை காக்க திமுக வெற்றி பெற வேண்டும்” என ஸ்டாலின் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு

Vandhana

துபாயில் முதலீடு செய்யத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்: இபிஎஸ்

EZHILARASAN D

மது போதையில் தகராறு – அதிமுக உறுப்பினருக்கு கத்திக்குத்து!

Web Editor