ராசிபுரம் தொகுதி அதிமுக அமைச்சரும் வேட்பாளருமான சரோஜா அக்கட்சியின் தேர்தல் அறிக்கைகள் குறித்து விளக்கிக் கூறி பரப்புரையில் ஈடுபட்டார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜா பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் மத்தியில் பேசிய சரோஜா, அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற அம்சங்களை எடுத்துக் கூறினார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். அவருடன் அதிமுக., பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: