“வீடுகள் தோறும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்” : ஹெச். ராஜா

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு குழாய் திட்டத்தின் மூலம் வீடுகள் தோறும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும் என்று ஹெச்.ராஜா வாக்குறுதி அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா பல்வேறு…

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு குழாய் திட்டத்தின் மூலம் வீடுகள் தோறும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும் என்று ஹெச்.ராஜா வாக்குறுதி அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காரைக்குடி ரயில் நிலையத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும், திருச்சி மானாமதுரை அகல ரயில் பாதை திட்டம் காரைக்குடி வழியாக செல்வதற்கு ஒரு மணி நேரத்தில் அனுமதி வாங்கிக் கொடுத்ததாகவும் கூறினார். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு குழாய் திட்டத்தின் மூலம் வீடுகள் தோறும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்து ஹெச்.ராஜா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.