நடைபயிற்சியின் போது வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சியின் போது திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சியின் போது திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு கோவை வந்தடைந்தார். இதனையடுத்து, இன்று காலை அவர் கோவை பந்தய சாலையில் திமுக தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, சிங்காநல்லூர் திமுக வேட்பாளர் கார்த்திக், கோவை தெற்கு காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் ஆகியோருடன் நடைபயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது பந்தய சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் திமுக தலைவரிடம் கைகுலுக்கி வரவேற்பு அளித்தனர். சிலர் திமுக தலைவருடன் மொபைலில் செஃல்பி எடுத்துக் கொண்டனர். அந்த வழியாக சென்ற ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் திமுக தலைவருடன் உரையாடினர். இதனைத் தொடர்ந்து கடை ஒன்றில் தேநீர் அறுந்திய மு.க.ஸ்டாலின் அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.