முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

அரசு காலிப்பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை: திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தால் மாணவர்கள் இளைஞர்கள் கல்விக்காக வாங்கிய கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும். அதேபோல் அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களில் 3.50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அம்பத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தான் தொழில்துறை அமைச்சராக இருந்த போது பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதாகவும் ஆனால் அதிமுக ஆட்சியில் தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். ஊழல் செய்து மக்களைச் சுரண்டக் கூடிய ஆட்சி தான் அதிமுக ஆட்சி என்றும், இந்த ஆட்சியை அகற்ற திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் அரசு அலுவலகங்களில் உள்ள மூன்றரை லட்சம் காலி பணியிடங்களில், தமிழக இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை ராக்கி திரையரங்கம் அருகே அம்பத்தூர்,அண்ணாநகர் வில்லிவாக்கம்,மதுரவாயல் சட்ட மன்ற தொகுதிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர், “எப்போதும் சென்னை என்பது கழகத்தின் கோட்டை. அந்த கோட்டையை கைப்பற்ற வேண்டும். அதற்காக தான் உங்களை நாடி வந்திருக்கிறேன். அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகாலம் பின்னால் சென்றுவிட்டோம்.

கொரோனா பரவலின் போது சட்ட மன்றத்தில் நான் கேள்வியெழுப்பிய போது முதல்வரிடம் கேட்டதற்கு அம்மா ஆட்சியில் எந்த பரவல் பாதிப்பும் ஏற்படாது என கூறிய பழனிசாமி மறுநாள் அவரே முககவசம் அணிந்து வந்தார். கொரோனாவை விட மோசமானவர் எடப்பாடி.


நான் தான் விவசாயி என்று எடப்பாடி சொல்லிக்கொள்கிறார். பச்சை துண்டு போட்டு பச்ச துரோகம் செய்யும் எடப்பாடி தான் ஒரு விவசாயி என கூறுகிறார். திமுக ஆட்சியில் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளோம். எடப்பாடிக்கு தெரிந்ததெல்லாம் ஊழல் மட்டும் தான்.. எடப்பாடிக்கு கலெக் ஷன், கரப்ஷன், கமிஷன் இவை மட்டுமே தெரியும். நான் தொழிற்துறை அமைச்சராக பொருப்பேற்றபோது பல்வேறு தொழிற்சாலைகள் துவங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் அப்படி எதுவும் ஏற்படவில்லை. மக்களை சுரண்ட கூடிய ஆட்சி தான் இந்த ஆட்சி.. இதனை ஒழிக்கவேண்டும் என்றால் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்” என திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டிசம்பரில் வெளியாகும் சிம்புவின் பத்து தல!

Vel Prasanth

நிவர் புயல் பாதிப்பு: கடலூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

Dhamotharan

ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்; மாணவி தற்கொலை

Janani