நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும்: ஸ்டாலின்!

நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன்…

நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அவர் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், நெசவாளர்களுக்கு தடையின்றி நூல் கிடைக்க, அரசு சார்பில் வாரியம் அமைத்து அதன் மூலம் சங்கங்களுக்கு நூல் வழங்கப்படும் எனக்கூறினார்.

மேலும், நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன் வட்டி 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் பெட்ரோல் ஐந்து ரூபாய் டீசல் நான்கு ரூபாய் குறைக்கப்படும், மாணவர்கள் கல்விக் கடன் ரத்து ,தமிழகம் சார்ந்த இளைஞர்களுக்கு மட்டுமே அரசு பணி வழங்கப்படும், ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என ஸ்டாலின் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.