மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம் – திமுகவை விமர்சித்த மாணிக்கம் தாகூர்…….!

காங்கிரஸ் கட்சியின் பலம் இல்லாமல் திமுக ஆட்சியமைத்திருக்க முடியாது என்று அக்கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேசிய  மாணிக்கம் தாகூர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது ;

எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான்

எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம். உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கிறது. மோடி அரசு ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் 8 எம்.பி. க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சைடு வாங்கிட்டுபோய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்கு கிடையவே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.