கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுக வேட்பாளர் பிரேமலதா நடிகர் விஜயகாந்தின் பிரபல சினிமா வசனமான ‘துளசிகூட வாசம் மாறினாலும் மாறும் தவசி வாக்கு மாறாது’ என்ற வசனத்தை பேசி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் அமமுக, தேமுதிக கூட்டணி வேட்பாளராக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதையடுத்து, பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், விஜயகாந்துக்கு ஆதரவு அளித்தது போல் தனக்கும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கூறினார். மேலும், விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக மாற்றுவேன் என்றும் பிரேமலதா விஜயகாந்த் வாக்குறுதியளித்தார். அப்போது விஜயகாந்த் சினிமாவில் உள்ள வசனமான துளசிகூட வாசம் மாறினாலும் மாறும் தவசி வாக்கு மாறாது என்ற சினிமா வசனத்தையும் பேசினார்.







