முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 17 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உதகை, தளி மற்றும் விளவங்கோடு ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 17 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக நட்சத்திர வேட்பாளர்களான பாஜக மாநில தலைவர் எல். முருகன் தாராபுரம் (தனி), வானதி சீனிவாசன் கோவை தெற்கு, நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கும், எச்.ராஜா காரைக்குடி, அண்ணாமலை அரவக்குறியிச்சில் போட்டியிடுகிறார்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் அறிவிக்கப்படாமல் உள்ள உதகை, தளி மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று உதகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கான நேர்காணலை தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி நடத்தினார். இதையடுத்து குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும் எனத் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பற்றி கருத்து தெரிவித்த சி.டி.ரவி, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிமுகவிற்குள் குழப்பம் இருப்பதாகவும் அதனை தெளிவுபடுத்துவோம்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்- நீதிமன்றம்

Jayasheeba

உயிருக்குப் போராடும் பழம்பெரும் நடிகை: உதவ முன்வந்த தமிழக அரசு

EZHILARASAN D

பரமேஸ்வராவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும்! – போர்க்கொடி தூக்கிய ஆதரவாளர்கள்… கர்நாடக காங்கிரஸில் பரபரப்பு…

Jeni