ரூ.49.50 கோடி கடன் : கமல்ஹாசன் சொத்து மதிப்பு தெரியுமா?

கமல்ஹாசனுக்கு 49.50 கோடி ரூபாய் கடன் இருப்பது வேட்புமனுவில் அவர் அளித்துள்ள பிரமாணப் பத்திரம் மூலம் தெரியவந்துள்ளது. கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது வேட்புமனுவை…

கமல்ஹாசனுக்கு 49.50 கோடி ரூபாய் கடன் இருப்பது வேட்புமனுவில் அவர் அளித்துள்ள பிரமாணப் பத்திரம் மூலம் தெரியவந்துள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ள சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 50 வருடங்களைக் கடந்து திரைப்படங்களில் நடித்து வரும் கமல்ஹாசன், தனது கையிருப்பில் 1,51,712 ரூபாய் இருப்பதாகவும், வங்கிக் கணக்குகளில் 2,43,84,963 ரூபாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்குகளில் 26,11,285 ரூபாய் முதலீடு செய்துள்ளார் கமல்ஹாசன்.

ஹெச்எஸ்பிசி இன்ஸூரன்ஸ் நிறுவனத்தில் 2,39,97,783 ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், தன்னிடம் 98,73,444 ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ, 2,70,66,198 ரூபாய் மதிப்புள்ள லெக்சஸ் காரும் இருப்பதாகக் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். தன்னிடம் நகைகள் எதுவும் இல்லை என்று தெரிவித்த அவரின் மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு 45, 09,01,476 ரூபாய் ஆகும்.நிலம், வீடுகள், நிலம் உள்பட அசையா சொத்துக்களின் மதிப்பு 131,84,45,000 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வங்கி உள்ளிட்ட நிதி அமைப்புகளில் 33,16,05,756 ரூபாய், தனிநபர்களிடம் 15,33,00,000 ரூபாய் உள்பட கடனாக 49,50,11,010 ரூபாய் செலுத்த வேண்டியிருப்பதாகவும் கூறியுள்ளார். லண்டனில் தனக்கு 2.50 கோடி மதிப்புள்ள ஒரு வீடு (joint property) இருப்பதாகவும் கூறியுள்ளார் கமல்ஹாசன். அசையும், அசையா சொத்துக்கள் உள்பட 176,93,46,476 மதிப்புள்ள சொத்துக்கள் கமல்ஹாசனிடம் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.