திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கவே தேர்தலில் களம் காண்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அவர் வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கவே தேர்தலில் களம் போட்டியிடுகிறேன். நாம் தமிழிரின் தேர்தல் அறிக்கையில் இலவசம் என்பது கல்வி, மருத்துவம், மின்சாரம் ஆகியவற்றுக்காகவே இருக்கும் என்றார். கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு தனி விமானத்தில் செல்வதும், ஹெலிகாப்டரில் செல்வதும் அவரின் வசதியைப் பொறுத்தது என்றார்.







