அனைவரும் பசியாற ஆட்சி செய்த அரசு அதிமுக: ஓபிஎஸ்

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது என துணை முதலமைச்சரும் போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர்…

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது என துணை முதலமைச்சரும் போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பகுதியில் ஆறாம்கட்ட தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர் பேசியதாவது, “அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார். தமிழகத்தை திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆண்டாலும் தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை செயல்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா இலவச அரிசியை வழங்கியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான். அனைவரும் பசியாற உண்ண வேண்டும் என்ற உயர்ந்த எண்ணதோடு நடைபெற்ற ஆட்சி அதிமுக ஆட்சி என” ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.