முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1.2 கோடியாக உயர்வு!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 68,020 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 1,20,39,644ஐ தொட்டுள்ளது. இதுவரை 1.13 கோடி பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 5,21,808 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து நேற்று வரை உள்ள பாதிப்புகளில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான எண்ணிக்கையே அதிகமாகும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 291 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

முன்னதாக மாகாஷ்டிரா மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்த நிலையில் மாநிலத்தில் 40,414 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 108 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இம்மாநிலம் கடந்த சில நாட்களாக அதிகப்பட்ச எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 1.6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

மக்கள் நீதி மய்யம் கட்சி மாநாடு ஒத்திவைப்பு

Jeba

அம்மாவிற்கு 2வது திருமணம் ஏன் செய்து வைத்தோம்? : மனம் திறக்கும் சிதார்த்தன் கருணாநிதி

Karthick

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

Karthick