மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கூடலூர் தொகுதி முதன்மை தொகுதியாக மாற்றப்படும் என உறுதியளித்தார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அதிமுக ஆட்சியில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களை பாதுகாக்கும் ஒரே கட்சி அதிமுக. மக்களுக்கான நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது”என பெருமிதத்துடன் தெரிவித்தார்.







