“அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதி உயர் சிகிச்சை” – அமைச்சர் ராஜ்மோகன்

அமோநியா கசிவால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மறுத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருவள்ளூர் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி, வேல்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருகை தந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ஆறுதல் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “அமோனியா பாதிக்கப்பட்டவர்களுக்கு அதி உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஓடிஸா மற்றும் வடகிழக்கு பகுதிகளை சார்ந்தவர்கள். அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த இரண்டு பெண்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடலை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல அரசு செலவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.