சாலையோரம் நின்றிருந்த அதிமுக தொண்டர்களைப் பார்த்து காரை நிறுத்திய முதல்வர் பழனிசாமி, அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று தேனி பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக உசிலம்பட்டி வழியாக எடப்பாடி பழனிசாமி சென்றார். உசிலம்பட்டி அருகே இடையப்பட்டி எனும் இடத்தில் சாலையோரம் திரண்டிருந்த அதிமுக தொண்டர்களை கண்டதும் முதல்வர் காரை நிறுத்தினார்.

முதல்வரை கண்டதும் தொண்டர்கள் உற்சாக கூச்சலிட்டு வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்து வணக்கம் தெரிவித்து கும்பிட்டுவிட்டு முதல்வர் தேனி நோக்கி சென்றார். முன்னறிவிப்பு இன்றி தொண்டர்கள் சாலையோரம் குவிந்ததும், முதல்வரும் காரை நிறுத்தி பேசிய சம்பவம் அப்பகுதியில் கவனம் பெற்றது.







